இரகசியமாக தப்பித்துச் சென்ற விமானத்தால் பதற்றம்…

இலங்கை தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலையிலிருந்து சர்வதேச விமானம் ஒன்று இரகசியமாக புறப்பட்டமை இலங்கையில் பதற்ற நிலையை உறுவாக்கியுள்ளது. மேலும் தெரியவருவதாவது. கடந்த 3ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வந்த சிங்கப்பூர் வர்த்தகர்கள் இருவர் சீன வியாபாரிகள் மூவருடன் கட்டுநாயக்க ஊடக சீனன்குடா துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில் எவ்வித அனுமதியும் இன்றி விமானம் திருகோணமலை விமானப் படையிலிருந்து அனுமதியின்றி சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை வந்த விமானம் நாட்டை விட்டு வெளியே செல்வதாயின் குடிவரவு குடியகல்வால் அனுமதிக்கப்பட்ட விமான நிலையத்தின் ஊடகவே செல்ல வேண்டும். அனுமதியின்றி சென்றமையால் நாட்டில் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரனை செய்து இன்று உத்தியோகபூர்வ தகவல் வெளியிடப்படும் என இலங்கை விமான சேவைகள் பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..