திருவாரூர் இடைத்தேர்தலை கிடப்பில் போட்ட தேர்தல் ஆணையம்…

திருவாரூர் தொகுதியில் மறைந்த முன்னால் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2016 ம் ஆண்டு இரண்டாவது தடவையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில் கடந்த ஆண்டு ஆவணி மாதம் 7ம் திகதி உடல் நலக்குறைவால் கருணாநிதி மரணமடைந்தார். இதனால் திருவாரூர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் சட்ட விதிகளின்படி திருவாரூர் தொகுதியில் மாசி 5ம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் இது பற்றி ஆலோசித்து வந்தது.

மேலும் தேர்தல் தலமைச் செயலகம் திருவாரூர் தேர்தல் இந்த மாதம் 28 ம் திகதி அறிவித்துள்ளது அதன் படி நடாத்த இருந்த இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கஜாபுயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்தி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்நிலையில் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..