நாடாளுமன்றத்தில் உருளைக்கிழங்கு விற்ற காங்கிரஸ்காரர்…

இன்றைய நாடாளுமன்றம் முடிந்த பின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுனில் ஜக்கார், குர்ஜீத் சிங் போன்றோர் நாடாளுமன்ற வாயிலில் நின்றபடி பஞசாப் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினார்கள். பஞ்சாப் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். பின் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் படி நாடாளுமன்ற அலுவலகத்தில் உருளைக்கிழங்கு கூவிக் கூவி விற்றனர்.

விவசாயம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே மோடியின் லட்சியக் கொள்கையாக இருக்கிறது மோடியின் அரசு விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க தயாராக இல்லை. ஆனால் அம்பானி மற்றும் அதானியின் பேச்சை கேட்க தயாராக இருக்கிறார்கள். சமீபத்தில் பஞ்சாப் சென்ற போது கூட அங்குள்ள சிறு விவசாயிகளின் பிரச்சனை குறித்து அவர் பேசவில்லை. விவசாயிகள் கடன்கள் விலையேற்றத்தால் குடுக்க முடியவில்லை. அதனால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து செல்கின்றது என கூறினார்கள்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..