பிரபல ரவுடியை கொலை செய்தவர்கள் சொன்ன காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்…

அண்ணாநகரில் திருந்தி வாழ்ந்த பிரபல ரவுடியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அண்ணாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை சத்யாநகரைச் சேர்ந்த சந்தானம் என்ற ரவுடி தொழிலை விட்டு திருந்தி வாழ்ந்துள்ளார் அவரின் நண்பர்களான சதீஷ், ஜோசப், அரி, விமல், சின்ன ராபர்ட்டை அழைத்து ரவுடித் தொழிலை விட்டுவிட சொல்லியிருக்கிறார் அதானால் பலமுறை அவர்களுக்கு அடித்து இருக்கிறார் சந்தானம்.

அதனால் சந்தானம் மீது கோபத்தை வைத்துள்ளனர் அவரது நண்பர்கள் சந்தானம் தினமும் வாழியால் போகும் போது ரவுடி தொழில் வேண்டாம் என்று கூறி விளையாட்டாக அடித்துவிட்டு செல்வாரம் இதானால் கோபமடைந்த நண்பர்கள் சந்தானத்தின் உடல் பலத்தை அறிந்து கண்ணில் மிளகாய் தூள் போட்டு கத்தியால் வெட்டியுள்ளனர் இந்த செய்தியை அறிந்த உறவினர்கள் உயிருக்கு போராடிய சந்தானத்தை போலீசாரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதித்தனர் ஆனால் இரத்தம் அதிகளவில் வெளியெரியதால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

மேலும் சிசிடிவி உதவியுடன் சந்தானத்தை கொலை செய்த சத்யாநகரைச் சேர்ந்த சதீஷ், ஜோசப், அரி, விமல் மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ள இருவர் என 6 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. முக்கிய குற்றவாளியான ராபர்ட் என்கின்ற சின்ன ராபர்ட்டை போலீசார் தேடிவருகின்றனர். போலீசாரின் விசாரனையில் சந்தானம் தங்களை திருந்தும் படி கூறியது பிடிக்கவில்லை அதனாலே கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..