துரை முருகனுக்கு திடீர் நெஞ்சுவலி…. அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதி…

மறைந்த முன்னால் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நேற்று சட்டசபையில் இரங்கல் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரை நினைவு கூர்ந்து பேசிய தி.மு.க் பொருளாளர் துரை முருகன் துக்கம் தாங்காமல் கதறி அழுதார். இந்த நிலையில் அதிகாலை துரை முருகனுக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக. அவரை அவசர அவரமாக ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் வீதியில் அமைந்துள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார் துரைமுருகன். மேலும் இன்று நடைபெற்ற சட்டசபை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..