பேட்டையா விஸ்வாசமா முதல் ரிலீஸ்…

வருடம் ஆரம்பித்து பலரின் மத்தியில் பேசப்பட்டுவரும் பேட்ட, விஸ்வாசம். இரண்டுமே மாஸான கதைக்களத்துடன் களத்தில் மோதுகிறது. ரஜினி பேட்ட படத்தில் நீண்ட வருடத்தின் பின் தனது பாணியில் நடித்துள்ளார். விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் தமிழரின் அடையாளமான வேஸ்டி சட்டை முறுக்கு மீசை என்று களமிறங்குகிறார். இந்த இரண்டு படத்தையும் யாராலும் பார்வையிடாமல் தவிர்க்க முடியாது என்றே கூற முடியும்.

எந்த படம் முதலில் ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் சென்னையில் பிரபலமான திரையரங்கு ரோஹினி சினிமாஸ் உரிமையாளர் நிகிலேஷ். அதிகாலை 1 மணிக்கு திரையிட அனுமதி கிடைத்தால் எங்களது எல்லா திரையரங்கிலும் விஸ்வாசம் திரையிடப்படும். 4 மணிக்கு பேட்ட திரையிடப்படும் என டுவிட் செய்துள்ளார்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..