ஆரவ்வின் புதிய படத்தின் அப்டேட் – சரண் இயக்குகிறாரா

வெள்ளித்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ் தற்போது ராஜ பீமா என்ற படத்தில் நடித்து வருகிறார் இதனை தொடர்ந்து ஆரவ் அவர்கள் விரைவில் சரண் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இது குறித்த தகவல் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது படம் குறித்து ஆரவ் டுவீட் செய்துள்ளார். படத்தின் தலைப்பு மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என வைக்கப்பட்டு விட்டதகவும் படத்தின் தலைப்பு கமலின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை நினைவுகூறும் விதமாக வைக்கப்பட்டுள்ளதா தெரிகிறது.

இந்த திரைப்படத்தில் ஆரவ் மார்க்கெட் ராஜாவக அதாவது டான் கதாப்பாத்திரத்தில் வருகிறார். ஆரவ் ஜோடியாக காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். நாசர், யோகி பாபு, ராதிகா சரத்குமார், சாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இத் திரைப்படத்தை கே.கிங் இசையக்கிறார், கே.வி.க்ஹான் ஒளிப்பதிவு செய்கிறார். இத் திரைப்படம் குறித்த தகவல் விரைவில் வெயிடப்படும் எனக்கூறப்படுகிறது.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..