அடங்கமறு பிரபலம் மீது போலிசார் தாக்குதல்…

சினிமாக்கு என்றலே எல்லா விஷயங்களையும் சமாளிக்க வேண்டும். வெற்றியும், தோல்வியும் கலந்து வரும், அப்படி தோல்வி காலங்களில் தைரியத்தை கைவிடாமல் முயற்சி செய்து சினிமாவில் மேலே வந்தவர்கள் பலர்.

அப்படி ஜெயம் ரவி இப்போது சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிகளை கண்டு வருகிறார். இவருடைய அடங்கமறு படத்துக்கு மக்களிடம் செம ரெஸ்பான்ஸ். இதனால் நேற்று பத்திரிக்கையாளர்களை படக்குழு சந்தித்தார்கள்.

அப்போது இப்பட இசையமைப்பாளர் பேசும்போது, அடங்கமறு படத்திற்காக மதுரை தியேட்டருக்கு ஜெயம் ரவி, இயக்குனர், நான் போனோம். அப்போது கடுமையான கூட்டம், ரவி, இயக்குனர் முன்னே சென்றுவிட்டனர்.

அவர்களுக்கு பின்னே நான் சென்றுகொண்டிருந்தேன், அப்போது போலீசார் கூட்டத்தை கலைக்க லத்தியால் அடித்தபோது என் மீதும் அடி விழுந்தது. இதை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர தடுக்கவில்லை என்றார்.

உடனே இயக்குனர் பேசும்போது, நான் வேண்டுமென்று தான் சாமை அடிவாங்கவிட்டேன். ஒரு அடி வாங்கவிட்டு தான், அவர் யார் என்பதை போலீசாரிடம் கூறினேன் என்றார்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..