தேனீர் விருந்திற்காக அரிசி சாத பக்கோடா செய்வது எப்படி…

மாலைப்பொழுதில் தேனீருடன் சாப்பிடுவதற்காக வீட்டிலேயே தயாரிக்களாம் மதியம் செய்த சாதம் மிஞ்சிவிட்டால் அதனை மிகவும் எளிமையான முறையில் அரிசிப் பக்கோடா செய்து கொள்ளலாம் இதற்கு தேவையான பொருட்கள்.

ஒரு கப் கடலைமா
ஒரு வெங்காயம்
இரண்டு பச்சைமிளகாய்
சிறிதளவு கொத்தமல்லித்தழை
ஒரு கொத்து கறிவேப்பிலை
தேவையான அளவு உப்பு, எண்ணெய்
இஞ்சி நறுக்கியது

பச்சைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி என்பற்றை சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும் பின் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும் பாத்திரத்தில் வடித்த சாதத்தை போட்டு நன்றக பிசைந்து கொள்ளவும் அதனுடன் கடலை மாவு, சிறிது சிறிதாக நறுக்கிவைத்தவற்றை தேவையான அளவு உப்புச் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக மீண்டும் பிசந்து கொள்ளவும்.

அடுப்பை பற்றவைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும் பிசைந்து வைத்த மாவை பக்கோடா போடுவது போல் போட்டு சிவக்க எடுத்துக் கொள்ளவும் மாலை நேர தேனீர் சுவைக்கு ஏற்ற அரிசி சாத பக்கோடா தாயர்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..