இடைத்தேர்தலுக்கு விண்ணப்பம் கோரல்…

திருவாரூரில் அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் வருகின்ற திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை (02-01-2019) காலை 9:30 தொடக்கம் 3ம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எனவும். விண்ணப்பத்திற்கான முற்பணம் இருபத்தியைந்தாயிரம் ரூபா செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. விண்ணப்பங்கள் 4ம் திகதியன்று பரிசீலனை செய்யப்படும் என அதிமுக தலமையகம் குறிப்பிட்டுள்ளது.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..