தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடுமோ? என்று கேட்ட தமிழிசை செளந்தர்ராஜனை வைத்து செய்த நெட்டிசன்கள்…

தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு இல்லை ஆனால் அன்று தொட்டு இன்று வரை தாமரை தமிழகத்தில் மலர்ந்தே தீரும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார் தமிழிசை செளந்தர்ராஜன். கடந்த 29-12-2018 இல் பிரபல இணையத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடந்தது அதாவது தமிழகத்தின் தற்போதய பெண் அரசியல்வாதிகளில் யார் அதிரடி சரவெடி? என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு நடந்தது இதில் கனிமொழி, சி.ஆர்.சரஸ்வதி, தேமுதிக கட்சி பிரேமலதா, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, அதிமுகவின் நிர்மலா பெரியசாமி, பாஜகவின் வானதி சீனிவாசன், நடிகை குஷ்பு என பல பேரின் பெயர்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த வாக்கு முடிவைப் பார்த்தவுடன் அடிப்போனார்களாம் இணைய தள வாசகர்கள் ஆமாங்க தமிழிசை செளந்தர்ராஜனுக்கு 47.06% எடுத்து லீடுல இருந்தாராம், இவரைத் தொடர்ந்து பிரேமலதா 17.99% வாக்கை பெற்று இரண்டாவதாகவும், கனிபொழி 16.94%, நடிகை குஷ்பு 7.95% மும் இவர் மட்டுமா ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா 3.52%, சி.ஆர்.சரஸ்வதி 2.52% பெற்றனர். தமிழிசை செளந்தர்ராஜனுக்கு கிடைத்த வாக்கின் எண்ணிக்கையைப் பார்த்து ஒரு வேளை தமிழகத்தில் தமரை மலர்ந்து விடுமா என்று நினைத்து விட்டார்களாம்.

இது மலரவே மலராது என்று நெட்டிசன்கள் சொல்கிறார்கள் எப்படி என்று பார்த்தால் இந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழிசை செளந்தர்ராஜனுக்கு வரும் கொமண்ட் அனைத்தும் அவரை செம்மய கலாய்த்து வைத்து செய்து விட்டார்கள்.

வைச்சு செய்தவற்றில் முக்கியமானவை…

1. வருடத்தின் கடைசி காமெடி, கலாய்க்கிறது கூட தெரியாம உண்மை என நம்பிட்டு இருக்கு அக்கா

2. எங்க அக்கா, ஒரு குழந்தை-டா!

அவங்களை ஏமாத்த உனக்கு எப்டிடா மனசு வந்துச்சு 😂😂😂

3. எவ்வளவு கஷ்டமான,இறுக்கமான மனநிலையில் இருந்தாலும்,அக்கா @DrTamilisaiBJP அவர்கள் பேட்டியை பார்த்தால் குபீர்னு சிரிப்பு வந்திடும்,அதுக்காகவே டாக்டருக்கு குடுக்கலாம் ஆதரவு

4. அக்கா நான் கூட உங்களுக்கு தான் வாக்களித்தேன்… இது நீங்க தமிழச்சிங்கிறதுக்காக தான். தமிழ்நாட்டில் தாமரைனு ஒன்னு மலர்ந்திச்சினா அது படர்தாமரையா தான் இருக்கும்…

5. நாங்க உன்னை கோவைசரளா ரேஞ்சுக்குதான் காமெடிக்கு வெச்சிருக்கோம் ,அரசியல் தலைவர் ரேஞ்சுக்கு கனவு காணாதே !

6. இல்ல இல்ல அதெல்லாம் மலராது… மொட்டுலயே பிச்சிடுவோம்..

இப்படி தமிழிசையை வச்சு செய்துவிட்டார்கள் நெட்டிசன்கள்…

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..